SRM திருச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை மற்றும் வளாக வாழ்வியல் துறை சார்பாக முண்டாசுகவி பாரதியின் 143 -ஆவது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு “பாட்டுக்கொரு புலவன் பாரதி” என்ற தலைப்பில் கவிதைப் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியானது 11/12/2024 பிற்பகல் 1:30 மணியளவில் அறை எண் 17-இல் நடத்தப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று பாரதியின் சிந்தனைகளை, தமிழ் மொழியின் பெருமைகளை, கவிதையாக எழுதினார்கள். இந்நிகழ்வின் முன்னதாக முற்பகல் 11 மணி அளவில் SRM திருச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தரைத்தளத்தில் பாரதியாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. கல்லூரியின் நிர்வாகத் துணை முதல்வர் முனைவர் கோ. இளங்கோ மற்றும் கல்வித் துணை முதல்வர் முனைவர் ச. பபியோலா கவிதா ஆகியோர் கலந்து கொண்டு பாரதியின் சிந்தனைகளை மாணவர்களிடம் பகிர்ந்தனர். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பா. கலையரசி நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர் என்.ஆர். சக்திவேல் செய்திருந்தார்.