SRM திருச்சி கலை அறிவியல் கல்லூரியின் வளாக வாழ்வியல் துறை சார்பாக உலக மனிதநேய தினம் 19.8.24 இன்று கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, மாணவர்களுக்கு “மனிதம் போற்றுவோம்” என்ற தலைப்பில் டிஜிட்டல் சுவரொட்டி வடிவமைக்கும் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் துறை சார்ந்த பத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சுவரொட்டிகளை மிக நேர்த்தியாக வடிவமைத்திருந்தனர்.