ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவஞ்சலி
SRM திருச்சி கலை அறிவியல் கல்லூரியில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகணை விஞ்ஞானியுமான ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் G. செந்தில்குமார், துணை முதல்வர்கள் முனைவர் இளங்கோ, மற்றும் பேபியோலா கவிதா, பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு கலாம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.