
சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
SRM திருச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக 10.10.2024 அன்று “சர்வதேச பெண் குழந்தைகள் தினம்” கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் அமைப்பின் சார்பாக ‘பெண் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்போம்’ என்பதை வலியுறுத்தி மாணவர்களும் பேராசிரியர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முனைவர் பா. கலையரசி செய்திருந்தார்.