மகாகவி பாரதியாரின் 103- ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு SRM திருச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக 11.09.24 அன்று சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் G.செந்தில்குமார் தலைமையுரை ஆற்றினார். நிர்வாகத் துணை முதல்வர் முனைவர் G. இளங்கோ மற்றும் கல்வித் துணை முதல்வர் S. பேபியோலா கவிதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரியின் தமிழாய்வுத் துறை இணைப் பேராசிரியர் முனைவர் வ. நாராயண நம்பி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு “பாரதி தரிசனம்” என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். இந்நிகழ்வில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.