மகாத்மா காந்தியின் 156- ஆவது பிறந்தநாள் விழா
எஸ்ஆர்எம் திருச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக இன்று தேசப்பிதா மகாத்மா காந்தியின் 156- ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பாரதி தமிழ் மன்ற அமைப்பின் பொறுப்பு மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். இந்நிகழ்வில் மாணவர்கள் காந்தியக் கொள்கையினை உறுதிமொழியாக ஏற்றனர்.