எஸ்.ஆர்.எம். திருச்சி கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் கடந்த 27.04.2021 அன்று “தமிழ் இலக்கியங்களில் பன்முக நோக்கு” என்னும் தலைப்பில் இணையவழி தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது. எஸ்.ஆர்.எம் திருச்சி மற்றும் இராமாபுரம் வளாகங்களின் தலைவர் மருத்துவர்.இரா.சிவகுமார் அவர்கள் வழிகாட்டுதலோடு நடைபெற்ற ,இக்கருத்தரங்கிற்கு எஸ்.ஆர்.எம் திருச்சி மற்றும் இராமாபுரம் வளாகங்களின் மேலாண்மைச் சார்பாளர் முனைவர் நா. சேதுராமன் தலைமை வகித்துப் பேசினார். எஸ்.ஆர்.எம் திருச்சி வளாகத்தின் செயல் இயக்குநர் முனைவர் ச.ரகுபதி, இணை இயக்குநர் மருத்துவர் ந. பாலசுப்பிரமணியன், கல்லூரி முதல்வர் முனைவர் செ.கி. கொற்றவேல் பாரதி, துணை முதல்வர்கள் முனைவர்.கோ.இளங்கோ, முனைவர் செ.லாரன்ஸ் லெவே ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கருத்தரங்கத் தொடக்க விழாவில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கிய துறைப் பேராசிரியர் முனைவர் அ.ரவிச்சந்திரன் சிறப்புரையாற்றினார்.
ஐந்து பல்கலைக்கழகங்கள் மற்றும் அறுபதுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து மொத்தம் 149 கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. பல்வேறு கல்லூரிகள், பல்கலைக் கழகங்களைச் சார்ந்த பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் ,இக்கருத்தரங்கில் ,இணைய வழியாகப் பங்கேற்றனர்.