தீபஒளித் திருநாள்
SRM திருச்சி கலை அறிவியல் கல்லூரியின் வளாக வாழ்வியல் துறை சார்பாக தீபஒளித் திருநாளை முன்னிட்டு 09.11.23 அன்று மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் நோக்கத்தோடு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் கல்லூரியின் வளாகத்தில் நடத்தப்பட்டது. கவிதை, பாடல், நடனம், கீ போர்டு வாசித்தல் என தொடர்ந்து நடைபெற்ற மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் காணும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது.