நாட்டின் வளர்ச்சியில் எனது கனவு
நமது இந்திய நாட்டின் 75 -ஆவது குடியரசு தின விழாவை கொண்டாடும் விதமாக 24.01.24 அன்று SRM திருச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக நாட்டின் வளர்ச்சியில் எனது கனவு என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், தேசத் தலைவர்களின் படத்தை வரைந்து வண்ணமிடுதல் என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும் நடைபெற்றது. இப்போட்டிகளில் 60-க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்விற்கு தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பா.கலையரசி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் டே .பிரான்சிஸ் சேவியர் கிறிஸ்டோபர் அவர்கள் தலைமை உரை வழங்கி சிறப்பித்தார். நிர்வாகத் துணை முதல்வர் முனைவர் கோ. இளங்கோ மற்றும் கல்வித் துணை முதல்வர் முனைவர் சா.பபியோலா கவிதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கி சிறப்புச் செய்தனர். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் சி.முத்தழகு நன்றியுரை வழங்கினார்.
?? இந்நிகழ்வினை உதவிப் பேராசிரியர் முனைவர் ந. கல்யாணி அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார்