பட்டிமன்றம்
மகாத்மா காந்தியின் 154 -ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று (16.10.23) SRM திருச்சி கலை அறிவியல் கல்லூரியில் வளாக வாழ்வியல் துறை சார்பாக மாபெரும் சிறப்புப் பட்டிமன்றம் மதியம் 1.30 மணியளவில் கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது. காந்தியின் வாழ்த்துப் பாடலோடு தொடங்கிய இந்நிகழ்ச்சிக்கு வளாக வாழ்வியல் துறை ஒருங்கிணைப்பாளர் முனைவர் பா.கலையரசி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் D. பிரான்சிஸ் சேவியர் கிறிஸ்டோபர், நிர்வாகத் துணை முதல்வர் முனைவர் G. இளங்கோ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து, காந்தியக் கொள்கையை முன்னெடுப்பதில் அதிக முனைப்புக் காட்டுவது இளைஞர்களா? முதியவர்களா? என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இப்பட்டிமன்றத்திற்கு நடுவராக தமிழ்த்துறைத் தலைவர் N.R.சக்திவேல் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
‘இளைஞர்களே’ என்ற அணியின் தலைவராக கணிதத் துறையின் உதவிப் பேராசிரியர் அழகேந்திரன் அவர்களும், ‘முதியோர்களே’ என்ற அணியின் தலைவராகத் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் முத்தழகு அவர்களும் பங்கு பெற்று சிறப்புற உரையாற்றினர். மாணவர்கள் அப்துல்லா, அபிராமி, பாலாஜி, கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு காந்தியக் கொள்கைகளை எடுத்துரைத்த பாங்கு கேட்போர் அனைவரும் வியக்கும் வண்ணம் அமைந்திருந்தது. காந்தியக் கொள்கையான அன்பையும், உண்மையையும் மாணவர்கள் மனத்துள் விதைக்கும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட இப்பட்டிமன்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.