பாரத மொழிகளின் திருவிழா -23
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதி நல்கையுடன் SRM திருச்சி கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறை இணைந்து நடத்திய “பாரத மொழிகளின் திருவிழா -23” என்ற பெயரில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி (11.12.23) இன்று நடைபெற்றது. “பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு” என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் இருபதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பேசினர். திருச்சி SRM பல்கலைக்கழகத்தைசார்ந்த வணிகவியல் துறைத் தலைவர் வின்சென்ட் மற்றும் TRP பொறியியல் கல்லூரியைச் சார்ந்த தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சுந்தரேஸ்வரன் ஆகியோர் நடுவர்களாக பங்கு பெற்றனர். முதற் பரிசினை II B.COM CA மாணவி கீர்த்தி ஸ்ரீ, இரண்டாம் பரிசினை III B.COM B மாணவர் முகம்மது அப்துல்லா, மூன்றாம் பரிசினை I B.SC CS மாணவி அபிராமி பெற்றனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் ஏறத்தாழ 150 – க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.