
மகாகவி நாள்
பாரதியாரின் 102 -ஆவது நினைவு நாளான இன்று (11.09.23) தமிழகம் முழுவதும் “மகாகவி நாளாக” அனுசரிக்கப்படுகிறது. இதன்படி, SRM திருச்சி கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் D. பிரான்சிஸ் சேவியர் கிறிஸ்டோபர், நிர்வாகத் துணை முதல்வர் முனைவர் G. இளங்கோ, கல்வித் துணை முதல்வர் முனைவர் S. பேபியோலா கவிதா, பேராசிரிர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர். முன்னதாக இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் மாணவி அட்சயா “செந்தமிழ் நாடெனும் போதினிலே” பாடலையும், முதலாம் ஆண்டு கணினி அறிவியல் மாணவி அபிராமி “நான் விரும்பும் கவி” என்ற தலைப்பில் உரையையும் வழங்கினர்.