மகாத்மா காந்தி நினைவு நாள்
எஸ் ஆர் எம் திருச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்துறை சார்பாக இன்று 30.01.2024 முற்பகல் 11 : 50 மணியளவில் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் 76- ஆவது நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் டே. பிரான்சிஸ் சேவியர் கிறிஸ்டோபர், நிர்வாகத் துணை முதல்வர் முனைவர் கோ.இளங்கோ கல்வித் துணை முதல்வர் முனைவர் சா. பபியோலா கவிதா ஆகியோர் கலந்து கொண்டு காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். முதலாம் ஆண்டு கணினி பயன்பாட்டு அறிவியல் பயிலும் மாணவிகள் காந்தியப் பாடலை பாடினர். இந்நிகழ்வில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு காந்தியின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வினை தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.