மாபெரும் தமிழ் கனவு
திருச்சிராப்பள்ளி எஸ்.ஆர்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் இணைய கல்விக் கழகத்தின் சார்பில், மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை திட்ட நான்காம் கட்ட நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு மா பிரதீப் குமார்.இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (12.04.2023) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைமை செயல் அலுவலர் திரு. சிவராஜா இராமநாதன், எஸ் ஏ நெட்வேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. நவாஸ் பாபு, கற்கை அகாடமி நிறுவனர் திரு இளஞ்செழியன், கௌரி பார்வதி சில்க்ஸ் உரிமையாளர் முனைவர் கௌரி, நேட்டிங் ஸ்பெசல் நிறுவனத்தின் நிறுவனர் திரு. பார்த்திபன் வேலுசாமி,எஸ் ஆர் எம் திருச்சி வளாகத்தின் இயக்குனர் திரு.மால்முருகன், எஸ்.ஆர்.எம் திருச்சி கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் திரு.பிரான்சிஸ் சேவியர் கிரிஸ்டோபர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.