Influenza Virus Awareness Program
H3 N2 என்ற புதிய வகை வைரஸ் இன்புளூயன்சாவின் துணை வகையான வைரஸ் ஆகும். இந்த தொற்று வைரஸ் குறித்தும் இது பின்னாளில் பரவாமல் இருக்கவும் எஸ் ஆர் எம் திருச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூயில் பயிலும் கிழக்கு வளாக விடுதி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் இன்று 17/03/2023 பிற்பகல் 01:10 மணிக்கு கருத்தரங்கக் கூடத்தில் நடத்தப்பட்டது. மாணவர்களுக்கு மாஸ்க்(முகமறை) அணிவதன் அவசியம் குறித்தும்,20/03/2023 முதல் அனைவரும் மாஸ்க் அணிந்தே கல்லூரிக்கு வரவேண்டும் என்றும் எடுத்து ரைக்கபட்டது.மேலும் ஒருவர் பயன்படுத்தும் பொருளை பிறர் பயன்படுத்தக்கூடா து எனவும், தங்கி உள்ள அறைகளை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. முதல்வரின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலின் படி விடுதி காப்பாளர் மற்றும் விடுதியின் ஒருங்கிணைப் பாளர் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.